உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்யக் கூடும்



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்தில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஹெல உறுமய ஆதரவு அளிக்காது…

wpengine

சீபா உடன்படிக்கையில் கையெழுத்திட மாட்டோம் – பிரதமர்

wpengine

பொசன் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

wpengine