உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, தென், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

68 ஆவது மாநாடு ஆரம்பம்

wpengine

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

wpengine

“மஹர சிறைச்சாலை பள்ளியை மீளத்திறக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பள்ளிவாசல் வளாகத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து..!

wpengine