உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…


நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஊவா. கிழக்கு. வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் திணைக்களத்தின் அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது.

Related posts

விசாரணை ஆணைக்குழுவில் கைப்பேசிகளுக்கு தடை

wpengine

பூனைக்குட்டிகள் போல் சத்தமின்றி இருந்த 2 பேர், இப்போது நாய் போல் குரைக்கின்றனர்’ – நிமால் லன்சா..!

wpengine

O/L : பரீட்சை மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு

wpengine