உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

காஜா என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 900 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.5N, கிழக்கு நெடுங்கோடு 87.4E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் இருக்கும் மீனவர்களுக்கும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Related posts

வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த துரித செயற்திட்டம்…

wpengine

கங்காராம விகாரையின் வருடாந்த பெரஹரா நிகழ்வு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை…

wpengine

தினமும் வரி நிவாரணங்களை வழங்க முடியாது…

wpengine