உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

கிழக்குதென் மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

wpengine

மலேசியாவில் இலங்கை அகதிகள் உட்பட 154,140 அகதிகள் தஞ்சம்

wpengine

இங்கிலாந்து அணியில் ஆதில் ராஷித் இணைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு…

wpengine