உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை…



நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமாக காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Azeem Kilabdeen

மேலும் 316 கொரோனா நோயாளர்கள் பதிவு

wpengine

துப்பாக்கி பிரயோகம் : விமானப்படை அதிகாரி பலி

wpengine