உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்று பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் சில பகுதிகளுக்கும், வடமாகாணத்திலும் இன்று(08) பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களின் கடற்கரையோர பிரதேசங்களில் காலை வேளைகளில் ஓரளவு மழையும், சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சுமார் 75mm மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

#rishma

Related posts

‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’

wpengine

பயங்கரவாத குற்றச்சாட்டு நீக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை..!

wpengine

வாக்காளர் அட்டைகள் பெறாதவர்களுக்கான அறிவித்தல்

wpengine