உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்றும் மழையுடன் கூடிய காலநிலை..



நாட்டின் மேற்கு, மத்திய, தெற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

மத்திய மலைத் தொடரின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு , வடமத்திய மாகாணங்கள் மற்றும் மாத்தளை . ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 40 -50Km வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது…

wpengine

பரீட்சை கருத்தரங்கு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை – மஹிந்த

wpengine

UPDATE – திட்டமிட்டபடி, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம்…

wpengine