உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் மழை…



நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், பிற்பகல் வேளையில் மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேற்கு , வடமேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும்.

இதேவேளை, காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

இடியுடன் கூடிய மழையுடன் போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசக்கூடும் எனவும், இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய மற்றுமொரு சந்தேகநபர் கைது (UPDATE)

wpengine

இன்று 18 மணித்தியால நீர் வெட்டு

wpengine

அதியுச்ச அதிகாரப்பகிர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றிணைவு

wpengine