உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…


மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு சிறைத்தண்டனை

Azeem Kilabdeen

வழக்கு முடிவுறும் வரையில் புத்தளம் பிரதேச சபையின் தலைவருக்கு விளக்கமறியல்…

wpengine

இலங்கையில் உள்ள நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் வீட்டை பார்த்திருக்கிறீர்களா!

wpengine