உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை வேளையில் மழை…



நாட்டின் பல பாகங்களில் இன்று(19) மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டல அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யலாம் என வளிமண்டல அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணம், மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் சற்று அதிகமாக எதிர்பார்க்கப்படுவதுடன், குறிப்பாக தென் கடற் பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணிக்கு 80Km வரை அதிகரிக்கலாம் என்றும் வளிமண்டல அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வெடிப்பு சம்பவங்கள் – இதுவரை 40 பேர் கைது…

wpengine

சந்தை, விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாது

wpengine

காவல்துறையிரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

wpengine