Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னரும் இதுபோன்று நாட்டில் சில பாகங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது.

கொத்மலையில் இருந்து பியகம வரையான பிரதான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்னோட்டத்து கிடைக்கப் பெறாதமையினால் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.

அத்துடன், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.எஸ். உடன் தொடர்பிலிருந்த இலங்கையரின் உறவுகளை கைது செய்ய பணிப்புரை – பிரதமர்

wpengine

சுனாமி நிதிகளை பிழையான வழிகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் டிரான் மற்றும் எமில்காந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.

wpengine

கருத்தடை சாதனங்கள் மற்றும் குடும்பக் கட்டுபாட்டு பொருட்களுக்கு தடை

wpengine