உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடமேற்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு…

wpengine

வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்..! – நாபீர் பௌன்ஷேசன் ஏற்பாடு

wpengine

அகில தனஞ்சயவிற்கு பதிலாக அணியில் நிசான் பீரிஸ்..

wpengine