உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை…



நாட்டின் பல பகுதிகளில் இன்று(11) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ , மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலேயே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியகூறுகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்னல் தாக்கங்களின் போது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மின் உபகரண பயன்பாட்டினை தவிர்த்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 681 பேர் கைது

wpengine

அரசின் 20 ஆவது சட்டமூல முன்மொழிவினை எதிர்க்கிறார் விக்கி ..

wpengine

மழை வெள்ளம் காரணமாக மிதக்கின்றது கல்முனை அல் – பஹ்ரியா பாடசாலை..!

wpengine