உள்நாட்டு செய்திகள்

நாட்டின் நிலவும் வறட்சியான காலநிலையில் சிறு மாற்றம்..



நாட்டின் வானிலை தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் இன்று(22) காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்றும் நாளையும் சிறு மாற்றம் நிகழுவதோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும்.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும், நாட்டின் வடபகுதியில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவும்.

காலை வேளைகளில் நாட்டின் சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#reeshma

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

முதல் இன்னிங்ஸில் இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்கள்

wpengine

கோத்தபாயவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க படைவீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் – மஹிந்த

wpengine