உள்நாட்டு செய்திகள்

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக SLFP இனால் 11 அம்சங்கள் அடங்கலாக கோரிக்கை…



(FASTNEWS | COLOMBO) – நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பதினொரு அம்சங்கள் அடங்கலாக கோரிக்கையொன்றினை தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை பாராளுமன்ற குழுவின் தலைவர் மலின் ஜயதிலக்கவிடம் கையளித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை அதிகரித்துக் கொண்டு புதிய பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு ஏற்றவகையிலான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டதிட்டங்களை பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே குறித்த கோரிக்கையை கையளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிலியந்தலை பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

wpengine

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்து மேத்யூஸ் நீக்கம்..

wpengine

உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி 12% ஆக அதிகரிப்பு

News Editor