உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…



(FASTNEWS|COLOMBO) மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

நனோ நைட்ரஜன் இன்றும் இலங்கைக்கு

wpengine

2800 குடும்பங்களுக்கு பழைய இருப்பிடங்களில் வசிக்கத் தடைவிதிப்பு

wpengine

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

wpengine