உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…



(FASTNEWS|COLOMBO) நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

நாட்டில் 2,871 பேருக்கு கொரோனா

wpengine

இரண்டாவது போட்டியின் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

wpengine

திரையரங்குகளுக்கு பூட்டு

wpengine