உள்நாட்டு செய்திகள்

நாட்டின் ஏனைய இடங்களில் சீரான காலநிலை…



நாட்டில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் அம்பாறை , ஹம்பாந்தோட்டை மற்றும் மொனறாகலை மாவட்டங்களில் 40 -50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய இடங்களில் சீரான காலநிலை நிலவும் என்று திணைக்களம் இன்று(29) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Azeem Kilabdeen

60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்ய முடிவு

News Editor

செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்

wpengine