உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி…



ஈரானுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

ஈரான் ஜானாதிபதி ஹசன் ரௌஹானியின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாபதி மைத்திரிபால சிறிசேன, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை, 5 உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் – இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் சந்தை வாய்ப்புகளை மேலும் விஸ்தரித்தல் மற்றும் இலங்கையில் ஈரான் அரசினால் மேற்கொள்ளப்படக்கூடிய முதலீடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

122 பாடசாலைகள் சுற்றிவளைப்பு – போதைப்பொருள் விற்ற 75 பேர் கைது..!

wpengine

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த வாரம்…

wpengine

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine