உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன தீர்வை அனுமதிப்பத்திர துஸ்பிரயோகம் குறித்து உயர்நீதிமன்றில் மனு.



நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன தீர்வை அனுமதிப்பத்திர துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று நேற்று உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

சமூக ஆர்வலர் நாகாநந்த கொடிதுவக்கு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் உரிய சாட்சியங்கள் இல்லை.

எனவே இதற்காக உயர்நீதிமன்றத்தில் முழுமை நீதியரசர்களின் விசாரணை அவசியம் இல்லை என்று சட்டமா அதிபர் தமது அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.

எனினும் வழக்காளியான கொடிதுவக்கு, ஏற்கனவே 10 வாகனங்களுக்கான தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்ட நிலையில் அவை ஒன்று 25 மில்லியன் ரூபா என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

எனவே இது பொதுமக்களின் இறைமையை பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், உயர்நீதிமன்றத்தில் முழுமை அமர்வில் இது விசாரணை செய்யப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்.

Related posts

அடையாள அட்டை வழங்கும் விசேட சேவை இன்று

wpengine

எரிபொருள் விலை மதிப்பீடு குறித்து சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து…

wpengine

தம்புள்ளை முன்னாள் மேயர் கைது

wpengine