உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற அருகில் இராணுவத்தை அழைத்தமை குறித்து விசாரணை – சபாநாயகர்



இராணுவம் நேற்று நாடாளுமன்றத்துக்கு அருகில் பிரசன்னமானமை குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கைகையின் பேரில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

இதற்கான உத்தரவை சபாநாயகர் கரு ஜெயசூரிய பிறப்பித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற பாதையில் பிரவேசிப்பதை தடுக்க இராணுவத்தையோ பொலிஸையே தாம் அழைக்கவில்லை என கரு ஜெயசூரிய குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்துக்கு அருகில் இராணுவமும் பொலிசும் நிலைகொண்டமை தொடர்பில் தாம் பொறுப்பேற்க முடியாது என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எனவே நாடாளுமன்றத்துக்கு அருகில் படையினரை அழைத்தது யார் என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற பாதைக்குள் செல்ல முடியாதப்படி பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்

wpengine

உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.

Azeem Kilabdeen

மஹிந்தானந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine