உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குகொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை



நாடாளுமன்ற அமர்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ப்பதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகளை சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைப்புக்களின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் வீரசூரிய தெரிவித்துள்ளார்

கடந்த வியாழக்கிழமையன்று அரசாங்கத்தின் பிரேரணை ஒன்றின் வாக்கெடுப்பின்போது ஆளும் கட்சி உறுப்பினர்களின் வரவின்மையால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது

இது மக்களின் ஆணையை மீறும் செயல் என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதாக அமைப்புக்களின் அழைப்பாளர் சரத் வீரசூரிய மேலும்  தெரிவித்துள்ளார்

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை வாக்கெடுப்பின்போது 225 உறுப்பினர்களில் 163 பேர் சமுகமளிக்கவில்லை என்பது அதிர்ச்சி தரும் தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

wpengine

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 12ம் திகதிக்கு முன் வெளிவரும்….

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம்

wpengine