ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாடாளுமன்ற அமர்வுகளில் நாளை மாற்றம்!



தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் நாளைய தினம் மாத்திரம் மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக முழு நேரம் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வுகள் நாளைய தினம் மாத்திரம் பாதி நேரம் (half day) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலம் சென்ற அமரபுர பீடத்தின் மாநாயக்க அக்கமஹா பண்டிதர், தவுல்தெனிய ஞானீஸ்சர தேரருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, நாளை பிற்பகல் 3 மணிவரை மாத்திரமே நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹாநாயக்கரின் இறுதி கிரியைகள் நாளைய தினம் பூரண அரச மரியாதைகளுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் – இரண்டாவது அலை அபாயமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியது

wpengine

தனியார் பிரிவுக்கு புத்தாண்டு விடுமுறை, நத்தார் விடுமுறை இல்லை.. 12 மணி நேர வேலை – உலக வங்கியில் கடன் பெற அரசின் புதிய சட்டம்…?

wpengine

இனியும் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே…

wpengine