உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை..



நாடளாவிய ரீதியில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வானிலை அதிகாரியான மொஹமட் சாலீதின் இது குறித்து தெரிவிக்கையில்;

“தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்று வீசுவதால் தென்மேற்குப் பிராந்தியங்களில் மழை பெய்யும். சில இடங்களில் 100mm மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மலை நாட்டுப் பகுதிகளில் மணிக்கு 50Km வேகத்தில் பலத்த காற்று வீசும். கரையோரப் பகுதிகளிலும் காற்று வீசும்.

இடிமின்னல் தாக்கத்தின் அபாயமிருப்பதால் மக்களை அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன், மீனவர்களும் கடலுக்குச் செல்வது குறித்து அவதானமாகவே இருக்க வேண்டும். வானிலை அறிவிப்புகளைக் கேட்டறிய வேண்டும்..” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

(rizmira)

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் உள்ளிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

எதிர்கட்சி தலைவர் தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

wpengine

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கான அறிவிப்பு

wpengine