உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – நாடளாவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று(29) அரசு தெரிவித்திருந்தது.

அதற்கமைய, இன்று(30) இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(04) காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மே தினம் என்பதனாலும், மே தினம் என்பது அரச, வர்த்தக விடுமுறை தினம் என்பதனாலும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரமும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்றுபட்டு வாக்களித்து ஊரின் தலைமையை உறுதிப்படுத்துங்கள்’

wpengine

ஊழல் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை கிடைத்தது

wpengine

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு

wpengine