ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆயத்தம்…



ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நாட்டில் பொருட்கள் மீதான வரி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் திருமண பந்தத்தில் இணையும் மஹிந்தானந்த அலுத்கமகே!

wpengine

“நடந்த நிகழ்வுகள் குறித்து தற்போது முஸ்லிம் மக்களுக்கு புரிந்து விட்டது” கோட்டாபய ராஜபக்ஷ பேருவளையில் கூறிய கதை… (VIDEO)

wpengine

கனடா ஜனாதிபதியுடன் ட்ரம்பின் மனைவி; வெளியான  படம்  (photo)

wpengine