உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி குறித்து மக்களின் நம்பிக்கை வீணாக்கப்பட்டுள்ளது – அஜித் பீ பெரேரா



ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாமையினால் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் பிரச்சினை மாத்திரமின்றி மேலும் பல விசாரணைகள தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்தவர்,

களுத்துறை மாவட்டத்தின் உறுப்பினர் மற்றும் கடந்த கால அமைச்சர் ஒருவரினாலே இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் முன்னர் பயனற்று இருந்தமை எங்களுக்கு தெரியும். அந்த விசாரணை நடவடிக்கைகள் அதற்கு பின்னர் ஆரம்பமாகவில்லை. அத்துடன் மேலும் பல காரணங்கள் உள்ளன.

இன்னும், உங்களுக்கு நினைவிருக்கின்றதா ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பென்ஸ் வாகனத்தின் இலக்கத்தினை பயன்படுத்திய ரேசிங் கார் ஒன்று கைது செய்யப்பட்டன. எனினும் இதுவரையில் அதற்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.

குறித்த வாகனமானது தற்போது நீதிமன்ற வளாகத்தில் இல்லை. அந்த வாகனத்தை மீளவும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாகனத்தின் இலக்கத்துடனான வாகனத்தை எவ்வாறு மீளவும் ஒப்படைக்க முடியும் என்று எனக்கு புரியவில்லை.

இவ்வாறான காரணங்களினால் புதிய அரசாங்கம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதனை தான் ஏற்றுக்கொள்வதாக பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

Related posts

நேற்று மாத்திரம் 73,454 பேருக்கு பைஸர் தடுப்பூசி

wpengine

இலங்கை அணி 322 ஓட்டங்களை ஸ்கொட்லாந்து அணிக்கு நிர்ணயிப்பு

wpengine

இலங்கையில் 6வது மரணமும் சற்றுமுன்னர் பதிவாகியது

wpengine