உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை சீர்திருத்தம் ஜனாதிபதி தலைமையில் இன்று..



நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை சீர்திருத்தம் இன்று(22) காலை 8.30 அளவில் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று(21) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன் போது இருதரப்பினருக்கும் இடையே அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதி தலைமையிலும், ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், பிரதமர் தலைமையிலும் தனித்தனியே இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றுஅமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் நம்பப்படுகின்றது.

இதன்படி, நிதி அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் மங்கள சமரவீரவுக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சுப் பதவி ரவி கருணாநாயக்கவுக்கும், அமைச்சு பதவியை இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பணவுக்கு அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கயந்த கருணாதிலக்கவுக்கு நாடாளுமன்ற சீர்திருத்த மற்றும் காணி அமைச்சுகள் வழங்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

இன்னும், நிதி அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் மங்கள சமரவீரவுக்கும், வெளிவிவகார அமைச்சுப் பதவி ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

(rizmira)

Related posts

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்…

wpengine

மக்களின் பிரச்சினைகள், நெருக்கடிகள் தீர்ந்ததும் தேர்தல் நடத்தப்படும் : தேர்தல்கள் ஆணைக்குழு

wpengine

இலங்கைக்கு வெற்றி இலக்காக 262 ஓட்டங்கள் நிர்ணயம்…

wpengine