உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நாளை…!!!



அமைச்சரவை திருத்தம் நாளை(25) முற்பகல் இடம்பெறவுள்ளதாக அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டால், தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன.

இதற்கமைய, இரண்டு பிரதான கட்சிகளுக்கும் உள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சரவை மாற்றம் ஞாயிறன்று(25) நடைபெறும் என நேற்று(23) அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

 

 

#####

Related posts

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலத்த பாதுகாப்பு..

wpengine

பரணகம ஆணைக்குழுவின் இறுதி அமர்வு வடமாகாணத்தில் இன்று

wpengine

ஐந்து மாகாணங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்…

wpengine