உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நல்லாட்சியும் அவன்ட் கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்



நல்லாட்சி அரசாங்கமும் அவன்ட் கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 20ம் திகதி முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப்பகுதி வரையில் அவன்ட் கார்ட் நிறுவனம் பணிகளைத் தொடர அனுமதிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் ரக்னா லங்கா நிறுவனம் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு எதிராக அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க போன்றவர்கள் குரல் எழுப்பி வந்த நிலையில் இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இன்னும், காலியில் மிதக்கும் ஆயுதக் கப்பல் மீட்கப்பட்டு அது குறித்ததும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

Related posts

வசந்த கரன்னாகொட மற்றும் ரொஷான் குணதிலக ஆகியோர் தரம் உயர்த்தப்பட்டனர்

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

wpengine

செப்டம்பர் மாதத்திற்குள் நாடு திறக்கப்படும்

wpengine