உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு



நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழன்(27) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.

நாட்டில் நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேநேரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய குறிக்கோளாகும்.

‘உங்களுடைய பிரச்சினைக்கு எங்களுடைய தீர்வு’ என்ற தொனிப் பொருளில் இன்று கொழும்பு விஹாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்படுகிறது.

எதிர்கால இலக்கைக் கொண்ட ஐவகைத் திட்டங்கள் இத்தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் இன்று நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

(riz)

 

 

Related posts

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கேக் விலைகள் குறையாது

wpengine

மஹர : இறுதி அறிக்கை 30 அன்று

wpengine

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

wpengine