உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்து



நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் தெரியவந்துள்ளது.

நாளை காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் மாதுலுவாவே சோபித தேரர், அத்துரலிய ரத்ன தேரர், பாட்டளி சம்பிக்க ரணவக, ஹிருனிகா பிரேமசந்திர, அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டீ.எஸ். குணவர்தன உட்பட 49 சிவில் அமைப்புக்கள் கைச்சாத்திடவுள்ளதாக நம்பப்படுகின்றது.

இவர்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதுடன் இதற்கு ஐக்கிய தேசிய கட்சி இன்று அனுமதி வழங்கியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பனை செய்வதற்கு தடை…

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

தாமரை கோபுரம் நிர்மாண ஊழல் – ஆணைக்குழு விசாரணை

wpengine