ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நதியாவை காதல் திருமணம் செய்த நடிகர் ஆரி



நதியா என்றால், பூவே பூச்சூடவா நதியா இல்லை, இலங்கையைச் சேர்ந்தவர்.

நெடுஞ்சாலை உள்பட பல படங்களில் நடித்தவர் ஆரி. சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா படத்தில் ஆரி நாயகனாக நடித்திருந்தார். இவரும் இலங்கையைச் சேர்ந்த நதியா என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். நதியாவின் பூர்வீகம் இலங்கை என்றாலும் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தது லண்டனில்.

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தந்ததையடுத்து, இன்று காலை இவர்கள் திருமணம் சென்னையில் நடந்தது. முன்னதாக நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

நதியாவுக்கும், ஆரிக்கும் பொதுவான நண்பர் மூலம் இருவருக்குமிடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இந்த நட்பு காதலாகி இன்று திருமணத்தில் முடிந்துள்ளது.

நதியா பிஏ பட்டதாரி. லண்டனில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

 

Related posts

தற்கொலை செய்து கொண்ட இராணுவ சிப்பாய்

wpengine

என்னால் தான் கோட்டா ஜனாதிபதியானார்.. நான் இல்லை என்றால் இன்று பிணமாக இருந்திருக்கும்..

wpengine

இந்தியா அரசியலில் மூக்கினை நுழைத்தோம்.. ஒப்புக் கொள்ளும் Cambridge Analytica…

wpengine