உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நடேசலிங்கம் குடும்பத்துக்கு நிரந்தர வீசா வழங்கிய அவுஸ்திரேலியா!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ்க் குடும்பமான நடேசலிங்கம் குடும்பத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் நிரந்தர வீசாவை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நடேசலிங்கத்தின் வீட்டுக்கு இன்று சென்று அதிகாரிகள் இது குறித்து  அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டில் இவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த போது, சட்டவிரோமாக தங்கியுள்ளதாகத் தெரிவித்து இவர்களை கைது செய்த அதிகாரிகள் மெல்போர்ன் தடுப்பு முகாமுக்கு  அனுப்பி வைத்திருந்தனர்.

அதன் பின்னர் பல்வேறு போராட்டங்களின் பின், பிள்ளையொன்றின் சிகிச்சை நடவடிக்கைகளை கருத்திற்கொண்டும் தற்காலிக வீசாவை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது அவர்களுக்கு நிரந்தர வீசாவை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நடேஸ்- பிரியா தம்பதிக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சமூக வலைத்தளங்களில் புகழப்படும் சங்கக்கார

wpengine

தப்பிச் சென்ற நோயாளி பிடிபட்டார் [UPDATE]

wpengine

விளையாட்டு மற்றும் சாதகமான ஒப்பந்தங்களை இலக்காக வைக்கும் பிரதமர்..

wpengine