Uncategorized

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி



நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மற்றும் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் மூல வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை நிலைவரம் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், சரத்குமாரை விட முன்னிலை பெற்றுள்ளார் நாசர்: 1344 சரத்குமார்: 1231 பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார் விஷால்: 1445 ராதாரவி: 1038 பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக், எஸ்.எஸ்.ஆர்.கண்ணனைவிட முன்னிலை பெற்றுள்ளார் கார்த்தி: 1493 எஸ்.எஸ்.ஆர்.கண்ணன்.

Related posts

கிரிக்கெட் இடைக்கால சபை அமைத்தால் பதவி விலகுவேன்: தயாசிறி

wpengine

வளர்ப்பு நாய் கணவனுக்கு கொடுத்த பதிலடி

wpengine

இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

wpengine