ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நடிகரை மணக்கும் தொகுப்பாளினி



பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘கயல்’ படத்தில் நடித்தவர் சந்திரன். இப்படத்தை தொடர்ந்து பிரபுசாலமன் தயாரிக்கும் ‘பைசல்’ என்ற படத்திலும், பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் ‘கிரகணம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அஞ்சனாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

அஞ்சனா, பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். தற்போது கோலிவுட்டில் நடக்கும் சில விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், ஒரு விருது வழங்கும் விழாவில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை பார்த்ததும் சந்திரனுக்கு பிடித்துப்போனதாம். முதலில் அஞ்சனாவுக்கு நண்பராக அறிமுகமாகியிருக்கிறார். பின்னர், இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் காதலிப்பதை சந்திரனே உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் வருகிற நவம்பர் 29-ந் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த பிள்ளை எங்கே?

wpengine

24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோக்களை நீக்கியது facebook…

wpengine

தமிழ் மாணவரை டிக்கட் புத்தகத்தால் தாக்கும் நடத்துனர்

wpengine