ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நடிகரின் உயிரை காப்பாற்ற ஜனாதிபதி மைத்திரியின் நடவடிக்கை!



பொலன்னறுவையில் சுகயீனமடைந்த நடிகர் ஒருவரை கொழும்புக்கு அழைத்து வர ஹெலிகப்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய ஹெலிகப்டர் வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற தொலைக்காட்சி நாடக நடிகர் சுரங்க லக்மாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டமையால் அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரின் ஆபத்தான நிலையை அறிந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய ஹெலிகப்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு கலைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஒருவர் தொடர்பில் ஜனாதிபதி இவ்வளவு பெரிய அர்ப்பனிப்பு செய்வது கலைஞர்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளதாக பிரபல நடிகரான சரத் விமலசுரி தெரிவித்துள்ளார்.

குறித்த நடிகர் கலந்து கொண்ட நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாமரைக் கோபுர இணையத்தள திறப்பில் மைத்திரிக்கு ஏமாற்றமும் அவமானமும் – ITSSL ஊடக அறிக்கை

wpengine

குடும்ப அரசியலை வெறுக்கிறேன்

wpengine

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா

wpengine