ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நடத்துனர்களுக்கும் சாரதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை…



(FASTGOSSIP-COLOMBO) பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளில் ஒலிக்கின்ற பாடல்களையும், அவற்றின் சத்தத்தையும் ஒழுங்குறுத்தக் கூடிய விதிமுறைகள் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இசைக்க விடப்படும் பாடல்களின் சத்தத்தின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய டெசிபள் மட்டங்கள் நிர்ணயிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பேருந்துகளில் எத்தகைய பாடல்களை ஒலிக்க விடலாம் என்பதை தெரிவுசெய்வதற்காக கலைஞர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விதிமுறைகளை முறையாக அமுலாக்கத் தவறும் நடத்துனர்களுக்கும் சாரதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா – கெமராவில் சிக்கிய சில கிளிக்ஸ்.. (PHOTOS)

wpengine

இன்றைய பேரணியில் கைதாகவுள்ள 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் இவர்கள் தான்…

wpengine

போதைப்பொருளுடன் பெண் கைது

wpengine