உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நகர சபைகள் பல மாநகர சபைகளாக தரமுயர்ந்தன



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஏழு நகர சபைகளை, மாநகர சபைகளாகவும், மூன்று பிரதேச சபைகளை , நகர சபைகளாகவும் தரம் உயர்த்த பொது நிர்வாக, மாகாண மற்றும் உள்ளூர் ஆட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி வவுனியா, திருகோணமலை, மன்னார், புத்தளம், களுத்துறை, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய நகர சபைகள், மாநகர சபைகளாக தரமுயர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனறாகல ஆகிய பிரதேச சபைகள் நகர சபைகளாக தரம் உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் மற்றும் பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட மஹிந்த? – நாமல் விளக்கம்.

News Editor

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

wpengine

மின்சார பட்டியல் SMS ஊடாக

wpengine