Top Story 2உள்நாட்டு செய்திகள்

த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (3) விடுவித்துள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவருடன் இணைந்து இருவரும் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட நிலையில், அந்த வர்த்தக செயற்பாட்டிற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடியே 70 இலச்சம் ரூபா பணத்தை பெற்று அதற்கான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடாமல் நிதி மோசடி செய்தார் என கனடா நாட்டிலுள்ள தனிநபர் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி பிரிவினரிடம் முறப்பாடு செய்துள்ளார்

இதனையடுத்து குறித்த முறைப்பாட்டுக்கு அமைய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் பாசிக்குடா தனியார் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரை கொழும்பில் இருந்த சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று (02) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அருண் தம்பிமுத்து சார்பாக ஆஜராகிய கமகே தலைமையிலான சட்டத்தரணிகள் இது ஒரு சிவில் வழக்கு வர்த்தகம் தொடர்பானது எனவும், இதனை நிதி மோசடி என சோடிக்கப்பட்டு முறைப்பாடு செய்துள்ளதாக வாதங்களை முன்வைத்திருந்தனர்.

பின்னர் இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665

wpengine

யாழ். வைத்தியசாலை கிளினிக் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

Azeem Kilabdeen

பாராளுமன்றம் நாளை கலைக்கப்படுமா?

wpengine