விளையாட்டு

தோல்வி குறித்து தோனியின் பதிலடி



இந்தியாவுக்கு எதிரான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 3 வீரர்களின் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றதுடன் தொடரையும் சொந்தமாக்கி வரலாறு சாதனை படைத்தது.

தோல்விக்கு குறித்து இந்திய கெப்டன் தோனி கூறுகையில்;

‘இது துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளமாக இருந்தது. எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் அதிகமாக ‘பவுன்ஸ்’ செய்ய முடியவில்லை. சுழலுக்கும் கைகொடுக்கவில்லை. வான்கடே ஆடுகளம் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும். பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காது என்பது அதிகமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இந்த ஒரு ஆட்டத்தில் மட்டுமே மோசமாக தோற்று இருக்கிறோம். பவுலிங்கில் கடைசி 25 ஓவர்களில் ஆட்டம் கட்டுப்பாட்டை விட்டு போய் விட்டது. யாராவது ஒரு பேட்ஸ்மேன் 150 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே, இது போன்ற ஸ்கோரை எட்ட வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

Related posts

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வீரர்கள் மத்தியில் புதிய தேர்வு.. மாலிங்கவுக்கு இடம் மறுக்கப்படுமா..?

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது..

wpengine

அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்…

wpengine