விளையாட்டு

தோல்வியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள் அணி – பிராவோ விசனம்



மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் சீர்கெட்டு கிடப்பதாக அந்த அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இதன் காரணமாகவே பிராவோ 2015 உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடி வருகிறார்.

இது தொடர்பாக பேசிய பிராவோ, “மேற்கிந்திய தீவுகள் அணியில் உலகத்தரமான வீரர்கள் உள்ளனர். ஆனால் பயிற்சிக்கு தேவையான மைதானம், கிரிக்கெட் அகாடமி உள்ளிட்ட ஏதும் இல்லை.

மேலும், கிரிக்கெட் வாரியத்திற்கும் வீரர்களுக்கும் இடையே உறவு வலுப்பட வேண்டும். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் நடக்கிறது.

இதனால் கிரிக்கெட் அணி அழிவை நோக்கி செல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

.

Related posts

இங்கிலாந்து வீரர் ராபின்சன் மீதான தடை விலக்கம்

wpengine

இந்தியா அணி வெற்றி

wpengine

பங்களாதேஷ் உடனான இருபதுக்கு – 20 போட்டித் தொடரிற்கான இலங்கை குழாம் பெயரீடு…

wpengine