விளையாட்டு

தோல்விக்கு காரணம் எமது திட்டம் பலிக்காததே… – ரோஹித் சர்மா



இலங்கை அணியுடனான முதல் T-20 போட்டியில் இந்தியா தோற்றமைக்கு காரணம் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததே என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று(06) தொடங்கிய சுதந்திர கிண்ண T-20 தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 05 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா,

“..இலங்கையின் வெற்றிக்கு காரணம் அவர்களின் சிறப்பான துடுப்பாட்டம் தான். தொடக்கத்திலிருந்தே அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

எங்கள் அணியினரின் பந்து வீச்சு நன்றாக இருந்த போதிலும், நாங்கள் வைத்திருந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த தோல்வியிலிருந்து மீண்டு, அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்…” என கூறியுள்ளார்.

 

#rizmira 

Related posts

அகில தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பில் ICC இனது நிலை

wpengine

பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை… வீரர்களின் நடவடிக்கை குறித்து மேத்யூஸ் ஆதங்கம்..

wpengine

WBBL 2020: அட்டவணை வெளியாகியது

wpengine