உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ள வருமானம்…



இலங்கை சுங்கப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கத் திணைக்களத்திற்கு கிடைக்கவேண்டிய வருமானம், நூற்றுக்கு 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சுங்கப் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(02) 4 வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்க திணைக்களத்திற்கு சுமார் 3 பில்லியன் ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக கடமையாற்றி, பீ.எஸ்.எம். சார்ள்ஸை அந்தப் பதவியிலிரு நீக்கி, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை நியமித்த நடவடிக்கைக்கு சுங்கத் திணைக்கள பணியாளர்கள் கடந்த 29 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

IPL 2017 – இலங்கை அணி வீரர்கள் மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகள்.. [முழு விவரம்]

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine

சிகரெட் விலையில் அதிகரிப்புடன் 15 % பெறுமதி சேர் வரியும் சேர்ப்பு.

wpengine