உள்நாட்டு செய்திகள்

தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று(18) உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங், லைபீரியா, பஹ்ரைன், ஓமான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,281 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,060 ஆகவும், 208 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பம்..

wpengine

முதலாம் தவணை இன்று ஆரம்பம் …

wpengine

கண்டி வன்முறைத் தாக்குதல் – இன்று முதல் நட்டஈடு வழங்கும் நடமாடும் சேவை…

wpengine