ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தொண்டமானுக்கும் நல்லாட்சியில் அமைச்சுப்பதவி..



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய பிரமுகர்களுக்கிடையில் நடைபெற்ற பலசுற்று கலந்துரையாடல்களின் பின்னர் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவியும், மேலதிகமாக பிரதியமைச்சர் பதவியொன்று அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்கப்படவுள்ளது.

குறித்த பிரதியமைச்சர் பதவிக்கு பெரும்பாலும் முத்து சிவலிங்கம் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தொண்டமானின் கட்சியினர் எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கொச்சிக்கடை குண்டுத் தாக்குதலும் அமெரிக்கா FBI சோதனைகளும்

wpengine

வசந்த சேனாநாயக்க திரும்பி வந்தார் – ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிப்பு… (PHOTOS)

wpengine

ஆசியக் கிண்ண தொடருக்கு தெரிவாகியுள்ள லசித் மாலிங்க குறித்து ஓர் கண்ணோட்டம்…

wpengine