உள்நாட்டு செய்திகள்

தொடர்மாடி வீடுகளுக்கு தபால் பெட்டிகள் வைப்பது குறித்து புதிய விதி…



தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் போது, கீழ் மாடியில் தபால் பெட்டிகளை கட்டாயமாக வைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தொடர்மாடி வீடுகளில் காணப்படும் தபால் சேவை குறைப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கிலேயே தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமினால் குறித்த இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் இலக்கங்களின் அடிப்படையில் தபால் பெட்டிகளைக் கொண்ட பிரதேசமொன்றை கீழ் மாடியில் ஸ்தாபிப்பதற்கும், குறித்த பெட்டிகளின் திறப்புகளை குறித்த வீட்டு உரிமையாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

(rizmira)

Related posts

சனத் நிஷாந்தவின் எரிந்த வீட்டுக்கு இரண்டு கோடி காப்புறுதி இழப்பீடு

wpengine

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மீளாய்வு மனு ஆகஸ்ட் 01ம் திகதி

wpengine

வாகன விபத்தில் மரணித்த இளைஞனின் குடும்பத்திற்கு என்னால் இயன்ற நியாயத்தினை வழங்குவேன் – நுவான்.

wpengine