கேளிக்கை

தொடர்ந்து நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வருகிறார்…


இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்த மானஸ்வி, தொடர்ந்து அவரை அம்மா என்றே அழைத்து வருகிறார்.

இமைக்கா நொடிகள் படத்தில் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று பேசும் வசனம் பிரபலமானது. மானஸ்வி காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள். இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை 2 படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்கிறார்.

கும்கி 2, பரமபதம் விளையாட்டு, இருட்டு, கண்மணி பாப்பா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உட்பட 20 படங்கள் மானஸ்வி நடிக்க இருக்கிறார்.
மகள் பற்றி கொட்டாச்சி கூறும்போது ‘அவள் சினிமா காட்சிகளை காப்பி செய்து நடித்த சில காட்சிகளை வீடியோவாக எடுத்து முகநூலில் பகிர்ந்தேன்.

அதை பார்த்துவிட்டு தான் இமைக்கா நொடிகள் வாய்ப்பு வந்தது. நான் சின்னதாக காமெடியன் வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால் என் மகள் பெரிய நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி. நயன்தாரா அடிக்கடி மானஸ்வியுடன் பேசுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைக்கிறார்’ என்று கூறியுள்ளார்.

Related posts

சிக்கிம் மாநிலத்து தூதராக ஏ.ஆர்.ரஹ்மான்…

wpengine

சிம்புவுக்கு கொரோனாவா?

wpengine

30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடித்தார் கேத்ரின் தெரசா…

wpengine