உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தொடர்ந்தும் தோல்விகளை தழுவிய நிலையில் டெஸ்ட் தொடரிலிருந்து மிஸ்பாஹ் ஓய்வு..



பாகிஸ்தான் அணியின் பிரபல வீரரான மிஸ்பா உல் ஹக் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 56 பந்துகளில் அதிவேகம் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் மிஸ்பாஹ்.

ஆனால் அந்த சாதனையை நியூசிலாந்து வீரர் பிராண்டன் மெக்கல்லம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் போது 54 பந்துகளில் சதம் அடித்து உடைத்தார்.

இந்நிலையில் மிஸ்பா உல் ஹக் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ்பா தலைமையிலான பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை முற்றிலும் இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

மக்களின் பிரச்சினைகள், நெருக்கடிகள் தீர்ந்ததும் தேர்தல் நடத்தப்படும் : தேர்தல்கள் ஆணைக்குழு

wpengine

கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய மாணவர்கள்…

wpengine

முறிகண்டி பிள்ளையாரை தரிசித்த இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் மஹேல (Photos)

wpengine